/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத நபருக்கு சிகிச்சை
/
அடையாளம் தெரியாத நபருக்கு சிகிச்சை
ADDED : மே 01, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத நபர் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.
படத்தில் காணப்படும் 55 வயது நபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி புதுச்சேரி ஒதியஞ்சாலை அருகில் இருந்து மயங்கிய நிலையில், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை ஆண்கள் அவசர அறுவை சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய பெயர் மற்றும் விலாசம் தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

