/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத மூதாட்டிக்கு சிகிச்சை
/
அடையாளம் தெரியாத மூதாட்டிக்கு சிகிச்சை
ADDED : ஜன 06, 2024 05:06 AM

புதுச்சேரி : அடையாளம் தெரியாமல் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண் குறித்து தவகல் தெரிவிந்தவர்கள் மருத்துவமனை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனை அருகே கடந்த 29ம் தேதி சுமார் 67 வயதுள்ள மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடன் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகிறார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமி முனிஸா பேகம் அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் ஆத்மநாதன் (94880-74492), குறைதீர் அதிகாரி டாக்டர் ரவி (94434-59348) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.