ADDED : செப் 15, 2026 06:14 PM
புதுச்சேரி: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா புதுச்சேரி மையம் சார்பில், பொறியாளர் தினத்தையொட்டி இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, புதுச்சேரி மையம் சார்பில், பொறியாளர் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது. புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் தலைமை தாங்கினார். பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, புதுச்சேரி மைய தலைவர் முன்னிலை வகித்தார். இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயசங்கர், கண்காணிப்பு பொறியாளர் வல்லவன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆராய்ச்சி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதன.
