தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஜூன் 10, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் ராஜவேலு தலைமை தாங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் பழனி வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தி முன்னிலை வகித்தார்.

பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தீப்பாய்ந்தான், ராஜா ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், மரங்களின் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு விருந்தினராக காவேரி கூக்குரல் இயக்கத்தின் அலுவலர் அசோக் பங்கேற்று 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' எனும் தலைப்பில் பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஜானகிராமன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us