ADDED : பிப் 12, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்,: மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலை பள்ளியில் மரக்கன்று நடும் விழவை தலைமையாசிரியர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கி, மர கன்று நட்டு துவக்கி வைத்தார்.
பள்ளி எஸ்.எம்.சி., தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியை புண்ணியவதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் மா, பாலா, கொன்றை, சவுண்டல் உள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது. நிர்வாகி துரைசிங்கம், மடுகரை தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.