/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெலிபேடு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
/
ஹெலிபேடு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : பிப் 13, 2025 05:05 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தை பசுமையாக்க மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் இருபுறமும் ஏராளமான அடர்ந்த மரங்கள் உள்ளன. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் இயற்கையை ரசித்தபடி வாக்கிங் செல்கின்றனர்.
பெஞ்சல் புயலின்போது ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஏராளமான மரங்கள் அடியோடு விழுந்தன. இதனால் தற்போது பசுமை இல்லாமல் காட்சியளிக்கின்றன. இந்த இடங்களை மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கும் பணியை சமூக பங்களிப்புடன் தினமலர் நாளிதழ் துவக்கி உள்ளது.
முதற்கட்டமாக தாகூர் கல்லுாரி மைதானத்தை பசுமையாக்கும் பணி நடந்தது. அதைத் தொடர்ந்து ஹெலிபேடு மைதானத்தில் மரக்கன்று நடும் பணி நேற்று நடந்தது. தினமலர் நாளிதழுடன் இணைந்து வனத்துறை மற்றும் லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். பூவரசம், இலுப்பை, மஞ்சள் கொன்றை, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
மரக்கன்று கடும் நிகழ்ச்சியில், லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி நிறுவனர் ஜெகத்ரட்சகன், தலைவர் சந்திப் ஆனந்த் வழிகாட்டுதல்படி, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, சமுதாய நலத்துறை டாக்டர்கள் ரஜினி, கண்ணன் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

