/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழக்குடியினரை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க தடை செய்தால் முற்றுகை பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

ADDED : மே 17, 2025 12:20 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பழங்குடியினரை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க தடை செய்துவருவோரின் வீடுகள் முற்றுகையிடப்படும் என, கூட்டமைப்பினர் தெரிவிதுள்ளனர்.
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் ராம்குமார் கூறியதாவது;
தமிழகத்தில் குறை எண்ணிக்கையில் உள்ள இருளர் இனங்கக்கு எஸ்.சி.,- எஸ்.டி.,க்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஆயிக்கணக்கான பழங்குடி மக்கள் வசிக்கிறோம்.
மாநிலத்தில் இருளர் உட்பிரிவு வில்லி, வேட்டைக்காரன் இனங்களை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 342(1)ன்படி ஜனாதிபதியால் 22.12.2016 வரையறுக்கப்பட்ட தினமாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு உள்ளூர், வெளியூர் பிரச்னை வருவதற்கு சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை.
புதுச்சேரியில் உள்ள நான்கு பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களை அட்டவணை பழங்குடி எஸ்.டி., பட்டியலில் சேர்க்கக்கூடாது என சிலர் தடை செய்து வருகின்றனர். இப்படி தடை செய்து வரும் நபர்களின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் முற்றுகையிடவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கவும் மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது' என்றார்.