தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மறைந்த முன்னாள் நீதிபதிக்கு புகழஞ்சலி

மறைந்த முன்னாள் நீதிபதிக்கு புகழஞ்சலி

மறைந்த முன்னாள் நீதிபதிக்கு புகழஞ்சலி


ADDED : ஆக 19, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 09:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மறைந்த முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி புகழஞ்சலி நிகழ்ச்சியில், அவர் நினைவு நுால் வெளியிடப்பட்டது.

மறைந்த முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேவில் நேற்று நடந்தது. முன்னாள் நீதிபதி மகள்கள் சந்திரா, யமுனா, மகன் சின்னு, மருமகள் ஷாந்தாள் வரவேற்றனர்.

பிரெஞ்சு துாதர் எத்தியன் ரோலண்ட் பியேக், அலையன்ஸ் பிரான்சே இயக்குனர் லாரண்ட் ஜாலிக்கூ, டாக்டர் நல்லாம் ஆகியோர் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி வரலாற்று சங்க துணைத் தலைவர் ராமதாஸ், சாந்திபாபு, சுனைனா ஹய்டன், பேராசிரியர் பிரின்ஸ், சதிஷ்நல்லாம், அலையன்ஸ் பிரான்சே தலைவர் வெங்கட்டராமன் ஆகியோர், புதுச்சேரி வரலாறு சம்பந்தமான மறைந்த நீதிபதி தாவீது அன்னுசாமி நினைவு நுாலை வெளியிட்டனர்.

தொடர்ந்து, அவரின், சட்டப் பணிகள், எழுத்துப் பணி குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசினர். ரித்திகா பாலகிருஷ்ணன் பரதநாட்டியம் நடந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us