/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருச்சி சாரதாஸ் கைத்தறி முதல் பட்டுபுடவை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பணம்
/
திருச்சி சாரதாஸ் கைத்தறி முதல் பட்டுபுடவை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பணம்
திருச்சி சாரதாஸ் கைத்தறி முதல் பட்டுபுடவை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பணம்
திருச்சி சாரதாஸ் கைத்தறி முதல் பட்டுபுடவை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பணம்
ADDED : பிப் 16, 2025 03:18 AM

திருச்சி, : திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறியில் நெய்யப்பட்ட முதல் பட்டுப்புடவை, சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
திருச்சி சாரதாஸ் நிர்வாக இயக்குனர்கள் ரோஷன், சரத் கூறியதாவது:
நெசவு எனும் கலையை உயிரென காத்துவரும் நெசவாளர்களை ஊக்குவிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆடை உற்பத்தி முறையை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டி அவர்கள் மனதில் நம் பாரம்பரிய கலாசாரத்தை பதிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நம் இந்தியாவின் ஜவுளி சாம்ராஜ்ஜியமான, திருச்சி சாரதாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி கூடத்தில், நெசவாளர்கள் பட்டுச்சேலையை நேர்த்தியாக உற்பத்தி செய்யும் அழகை வாடிக்கையாளர்கள் பார்த்து பாராட்டுகின்றனர். இந்த தறியில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பட்டுச்சேலையும், இறைப்பணிக்கு அர்ப்பணிக்கப்படும்.
அதன்படி இந்த புதிய தறியில் நெய்யப்பட்ட முதல் சேலை, உலக மக்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் நம் அன்னை சமயபுரம் மாரியம்மனுக்கு, நேற்று நெசவாளர்களின் கரங்களால் சமர்ப்பிக்கப் பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த புடவைகள், சர்வ சமய ஆலயங்களுக்கும் சமர்ப்பிக்கப்படும்.
இந்த சிறப்பு மிக்க நிகழ்வில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு, எங்களது புண்ணிய பயணத்தில் ஒரு அங்கமாக விளங்க அன்புடன் அழைக்கிறோம்.
மேலும், வழக்கம் போலவே சுபமுகூர்த்த பட்டு, ஜவுளி மற்றும் ரெடிமேட் ரகங்களை திருச்சி சாரதாசில், 12 சதவீத தள்ளுபடியில் உன்னதமான உணர்வுடனும், மனநிறைவுடனும் வாங்கி, ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

