/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது திருச்சி சிவா பேச்சு
/
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது திருச்சி சிவா பேச்சு
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது திருச்சி சிவா பேச்சு
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது திருச்சி சிவா பேச்சு
ADDED : ஏப் 12, 2025 05:52 AM

கடலுார் : தமிழகத்திற்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என தி.மு.க., துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா பேசினார்.
கடலுாரில் மத்திய அரசை கண்டித்து நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;
தமிழக முதல்வர் ஸ்டாலின், தாயாக மாறி நாட்டு மக்களை அரவணைத்து வருகின்றார். வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என முதல்வர் ஆட்சி செய்து வருகிறார்.
இலவச பஸ், ஓசி பஸ் இல்லை. பெண்கள் பயணிப்பதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகத்திற்கு அரசு செலுத்துகிறது. சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு கவர்னர்களுக்கும், அவர்களை அனுப்பியவர்களுக்கும் சம்மட்டி அடி.
குடியுரிமை திருத்த சட்டம், நீட் உள்ளிட்டவைகளில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. டில்லியில் தி.மு.க., எம்.பி.,களுக்கு தற்போது அதிக மரியாதை கிடைக்கிறது. ஏனென்றால் நாங்கள் ஸ்டாலின் பட்டாலியன்.
ஜி.எஸ்.டி., வரி திருப்பி கொடுப்பதில் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கிறது. நுாறு நாள் வேலை திட்டத்தில் நிதி கொடுக்காமல் உள்ளனர். இயற்கை பேரிடர் நிதி, கல்விக்கு நிதியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
நாங்கள் ஹிந்திக்கு எதிரி இல்லை. ஹிந்தி பேசுபவர்களை எதிர்க்கவில்லை. தி.மு.க., எப்போதும் போராடும். அதற்கு பொதுமக்கள் ஆதரவு மட்டும் தந்தால் போதும். உலக விண்வெளியில் இந்தியா சிறந்து விளங்க காரணம் தமிழர்கள். அனைவரும் அரசுப்பள்ளியில் பயின்றவர்கள். இவர்களுக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தெரியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

