ADDED : ஆக 22, 2025 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல், அடையாள அட்டை, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு என, முப்பெரும் விழா நடந்தது.
தலைமையாசிரியை ராஜவேணி தலைமை தாங்கினார். ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு சீருடை, அடையாள அட்டை, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்தினர். ஆசிரியர் ராஜேஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கன்னியம்மா, தமிழ் மலர், மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.