ADDED : ஆக 27, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை, அடையாள அட்டை வழங்கல், பரிசளிப்பு என, முப்பெரும் விழா நடந்தது.
தலைமையாசிரியை காந்திமதி தலைமை தாங்கினார்.
ஆங்கில ஆசிரியை சத்தியவதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்துகொண்டு  சீருடை,  தையல் தொகை, அடையாள அட்டை, பரிசுகள் வழங்கினார்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஆசிரியை சுகுணா நன்றி கூறினார்.

