/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா
/
வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஆக 20, 2025 06:55 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கண்காட்சி, ஓவியப்போட்டி, டெங்கு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை செல்வநாயகி வரவேற்றார். லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பத்மினி தலைமை தாங்கினார்.மருத்துவ அதிகாரி ரோமனோ அமல்ராஜ்,பள்ளி துணை முதல்வர் சாந்தா தேவி, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் லில்லி புஷ்பராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அதிகாரி டெங்கு விழிப்புணர்வு ஓவியபோட்டியை துவக்கி வைத்தார். பள்ளி துணை முதல்வர் சாந்தா தேவி டெங்கு கொசுவின் வாழ்க்கை சுழற்சி தொடர்பான கண்காட்சியை துவக்கி வைத்தார்.
சுகாதார உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் டெங்கு அறிகுறி மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஹூமாயூன் டெங்கு நோயின் ஆபத்துகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் டெங்கு நோய் வராமல் மாணவர்கள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
முன்னதாக நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.சுகாதார உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.