/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தே.ஜ., கூட்டணியில் சிக்கல் :அமித் ஷா வருகைக்கு காத்திருப்பு
/
தே.ஜ., கூட்டணியில் சிக்கல் :அமித் ஷா வருகைக்கு காத்திருப்பு
தே.ஜ., கூட்டணியில் சிக்கல் :அமித் ஷா வருகைக்கு காத்திருப்பு
தே.ஜ., கூட்டணியில் சிக்கல் :அமித் ஷா வருகைக்கு காத்திருப்பு
ADDED : பிப் 08, 2026 04:06 AM
வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த முறை கொடுக்கப்பட்ட 16 சீட்டுகள் மீண்டும் என்.ஆர். காங்கிரசுக்கும்,14 சீட்டுகள் பா.ஜ., விற்கும் முடிவாகியுள்ளது.
இதில் அ.தி.மு.க.,2, லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 என 4 தொகுதிகள் தவிர்த்து 10 தொகுதிகளில் பாஜ., போட்டியிட உள்ளது. அதில், கடந்த முறை என்.ஆர்.காங்., போட்டியிட்ட 16 தொகுதிகளையும் மாற்றமின்றி வழங்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி கறாறாக கூறியுள்ளார்.
இந்நிலையில் எதிர் கட்சிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை பா.ஜ., ஏற்கனவே கண்டறிந்து, அந்த தொகுதிகளில் கட்சியில் சீட்டு கிடைக்கா மலும், நிதி இல்லாமலும் தவிக்கும் வெற்றி பெறக்கூடிய எதிர்க்கட்சி வேட்பாளர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை சிலரிடம் ந டத்தி வருகிறது.
அதில், சில தொகுதிகள் என்.ஆர்.காங்., வசம் உள்ளதால், அந்தத் தொகுதிகளை தங்களுக்கு கேட்டு வாங்க பா.ஜ., முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உதாரணத்திற்கு, ஏம்பலம் தொகுதியில் காங்., சார்பில் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும், அவரது சகோதரர் மகன் மோகன்தாசும் போட்டியிடுவதற்கு சீட்டு கேட்டு கடுமையாக போராடி வருகின்றனர்.
இதில் கந்தசாமிக்கு சீட்டு வழங்கப்பட்டால், உடனடியாக மோகன்தாசிற்கு பாஜ.,வில் சீட்டு தர தயாராகி உள்ளது.
ஆனால் இந்த தொகுதி முதல்வர் ரங்கசாமியிடம் உள்ளதால் என்ன செய்வது என்று புரியாமல் பா.ஜ., கையை பிசைந்து கொண்டு இருக்கிறது.
இதேபோல் சில தனித் தொகுதிகளிலும் பிரச்னை நீடித்து வருகிறது. வரும் 14ம் தேதி காரைக்காலிற்கு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சீட்டு பங்கீடு பேச்சு வார்த்தை முடித்த பின்பே பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்.
அதன் பின்னரே யார், யாருக்கு தேர்தலில் சீட்டு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகும் என, கட்சியினர் கூறி வருகின்றனர்.

