தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தடுப்பு கட்டையில் லாரி மோதி விபத்து

தடுப்பு கட்டையில் லாரி மோதி விபத்து

தடுப்பு கட்டையில் லாரி மோதி விபத்து


ADDED : அக் 18, 2026 05:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 05:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: முள்ளோடையில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் டேங்கர் லாரி மோதிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மணலியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று காலை காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி., நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம் மாவட்டம், எரவன்சேரியை சேர்ந்த உதயக்குமார், 39, என்பவர் ஓட்டிச் சென்றார்.

புதுச்சேரி – கடலுார் சாலை முள்ளோடை சந்திப்பு அருகே சென்ற போது, உதயக்குமார் துாக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி சிக்கியது.

இதனால், லாரியின் இன்ஜின் உடைந்து ஆயில் சாலையில் கொட்டியது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை கிரேன் மூலமாக மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us