தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜிப்மரில் சிகிச்சை பெற்ற பெண் சாவு

ஜிப்மரில் சிகிச்சை பெற்ற பெண் சாவு

ஜிப்மரில் சிகிச்சை பெற்ற பெண் சாவு


UPDATED : அக் 18, 2026 05:29 PM

ADDED : அக் 18, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 05:29 PM ADDED : அக் 18, 2026 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மடுகரை, சேடர் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி மோனிகா,30; இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மோனிகா கடந்த 4 ஆண்டுகளாக முடக்குவாதம் எனப்படும் எலும்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 11ம் தேதி இரவு மோனிகாக, அவரது கணவருடன், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின், சிறிது நேரம் கழித்து, பல்சர் பைக்கில், அவரது கணவருடன் தனது வீட்டிற்கு சென்றார்.

வீட்டின் எதிரே வண்டியில் இருந்து கீழே இறங்கும்போது நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்ததால், இடது கால் முட்டியில் அடிபட்டது. மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு இடது கால் முட்டியில் எலும்பு விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறினர். அங்கு மோனிகா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 14ம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இடது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மோனிகா நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us