/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாரி உரிமையாளர் தற்கொலை: போலீசார் விசாரணை
/
லாரி உரிமையாளர் தற்கொலை: போலீசார் விசாரணை
ADDED : மார் 02, 2024 10:45 PM
பாகூர்: லாரி உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு, ராஜா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் 54; டிரைவர். சொந்தமாக டாரஸ் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி 53. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜசேகரனுக்கு குடி பழக்கம் இருந்தது.
அடிக்கடி குடித்து விட்டு வந்து, மனைவி வசந்தியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 1ம் தேதி, ராஜசேகரன் அதிக மது போதையில் வீட்டில் இருந்ததால், வசந்தி, இப்படி செய்தால் வாங்கி கடனை எப்படி கட்டுவது என, கேட்டு கண்டித்துள்ளார்.
பின், ராஜசேகரன் படுக்கை அறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், வசந்தி உள்ளே சென்று பார்த்த போது, ராஜசேகரன் ஜன்னல் கம்பியில் துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

