நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட கிராமங்களில், 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரியில் சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 20ம் ஆண்டு நினைவு நாள் நேற்று பலவேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, பனித்திட்டு, நரம்பை கடற்கரை பகுதியில் நடந்த சுனாமி நினைவு தினம் அனுசரிக்கும் நிகழ்ச்சியில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் தனித்தனியே பங்கேற்று சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, மெழுகு வர்த்திகள் ஏற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

