sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுனாமி நினைவு நாள் : கவர்னர், முதல்வர் அஞ்சலி

/

சுனாமி நினைவு நாள் : கவர்னர், முதல்வர் அஞ்சலி

சுனாமி நினைவு நாள் : கவர்னர், முதல்வர் அஞ்சலி

சுனாமி நினைவு நாள் : கவர்னர், முதல்வர் அஞ்சலி


ADDED : டிச 27, 2024 06:07 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்குகவர்னர், முதல்வர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், 20வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி கடற்கரை சாலை, காந்தி சிலை பின்புறம் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன் குமார்ஆகியோர் கடலில் பால் ஊற்றி, மலர் வளையம் வைத்து, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், பாஸ்கர், லட்சுமி காந்தன், பிரகாஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எதிர்க்கட்சித்தலைவர் சிவா, அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில்எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், வம்பாகீரபாளையம் பகுதி மீனவர்களுடன், சோனாம்பாளையம் சந்திப்பில், அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ஊர்வலமாக கடற்கரை சாலை பகுதிக்கு சென்று,அஞ்சலி செலுத்தினார்.

அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், சோலை நகர் தெற்கு பகுதியில் சுனாமி நினைவு துாண் முன் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் தமிழ்நாடு மீனவர் பேரவை புதுச்சேரி மாநிலம் சார்பில், ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்று,கடற்கரை காந்தி சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, சுனாமியால் உயிர்நீர்த்தவர்களின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, கடற்கரை மணல் பரப்புக்கு சென்று பெண்கள் கடலில் பால் ஊற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதில் தேசிய மீனவர் பேரவை தலைவர்இளங்கோ மற்றும் பல்வேறு மீனவர் அமைப்பு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

காரைக்காலில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் அமைச்சர் திருமுருகன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜ்பவன் தொகுதி காங்., சார்பில் பொறுப்பாளர் மருது பாண்டியன் தலைமையில் மாவட்ட தலைவர் செந்தில்குமார்,ஸ்ரீதர் பாபு, இளைஞர் காங்., செயலாளர்சித்தானந்தம் உள்ளிட்டோர் வைத்திக்குப்பம் கடற்கரையில் மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏற்றிஅஞ்சலி செலுத்தினர்.

காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் மின் அலுவலகம் அருகே மெழுகுவத்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில், சந்திரன், மக்கள் நலச் சங்க செயல் தலைவர் ஆறுமுகம், தலைவர் குமார் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில தலைவர் ராமதாஸ் தலைமையில் தலைமை செயலகம் எதிரே கடலில் பால் ஊற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பொதுச்செயலாளர்ராஜன், பொருளாளர் செல்வகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us