ஜிப்மரில் வரும் 27ம் தேதி வரை காசநோய் பரிசோதனை முகாம்
ஜிப்மரில் வரும் 27ம் தேதி வரை காசநோய் பரிசோதனை முகாம்
ADDED : மார் 25, 2026 07:46 AM

புதுச்சேரி: உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, ஜிப்மரில் வரும் 27ம் தேதி வரை, காசநோய் பரிசோதனை முகாமை நடக்கிறது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஜிப்மர் நுரையிரல் மருத்துவத் துறை சார்பில், நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை ஜிப்மர் மருத்துவமனையில் பொது மக்களுக்கான காசநோய் பரிசோதனை முகாம்' நடத்தப்படுகிறது. பொதுமக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் இணைத்து, காசநோயை ஒழிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியாக இம்முகாம் நடக்கிறது.
காசநோய் பரிசோதனை துவக்க முகாமில் நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவர் தர்ம பிரகாஷ் திவேதி வரவேற்றார். ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார் துவக்கி வைத்தார். நுரையிரல் மருத்துவ பேராசிரியர் மஞ்சு பேசுகையில் 'தன்னார்வத்துடன் காசநோய் பரிசோதனைக்கு முன்வ ருமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார். கூடுதல் பேராசிரியர் மதுஸ்மிதா 'காசநோய் சிகிச்சையை முழுமையாக பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். பேராசிரியர் விஷ்ணுகாந்த் நன்றி கூறி னார்.
