/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுரங்கப்பாதை அணுகு சாலை திறப்பு
/
சுரங்கப்பாதை அணுகு சாலை திறப்பு
ADDED : மார் 17, 2025 02:35 AM

புதுச்சேரி: நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கட்டப்பட்ட சுரங்கப்பாதை அணுகு சாலையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
முதலியார்பேட்டை நுாறடி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மேம்பாலத்தின் கீழ் 5.38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அணுகு சாலை திறப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியார் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஆறுமுகம், இநிலை பொறியாளர் கோபிநாத் உடனிருந்தனர்.
தி.மு.க., எம்.ல்.ஏ.,வுடன் சபாநாயகர் பயணம்
சுரங்கப்பாதை அணுகு சாலையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்ததையடுத்து, சபாநாயகர் செல்வம், அங்கிருந்த தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்திடம் பைக் எடுத்து வரும்படி அறிவுறுத்தினர்.
அங்கிருந்தவர்களிடம் இருந்து சம்பத் எம்.எல்.ஏ., ஸ்கூட்டி பெற்று வந்தார். பின், அதில், சபாநாயகர் செல்வம் ஸ்கூட்டியின் இருக்கையில் அமர, சம்பத் எம்.எல்.ஏ., ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றார். சுரங்கப் பாதை வழியாக சென்று பார்வையிட்டு, ஐந்து நிமிடத்தில் திரும்பினர்.
தி.மு.க., எம்.எல்.ஏ., ஓட்டிய ஸ்கூட்டியில் பா.ஜ., கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் பயணம் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, சம்பத் எம்.எல்.ஏ., தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.