/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு
/
முத்தாலம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு
ADDED : ஆக 26, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி, வைத்திக்குப்பம், முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் 42ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.
கடந்த 22ம் தேதி சாகை வார்த்தல், செடல் உற்சவம், தேரில் அம்மன் வீதியுலா, 23ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு விநாயகர், முருகர், அம்மன் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பங்கேற்று தரிசனம் செய்து, கோவிலுக்கு நிதியுதவி வழங்கினார்.

