தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கோர்ட்டில் சரண்


ADDED : செப் 25, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆனந்த் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் வசித்தவர் ஆனந்த் என்கிற முண்டகண்ணு ஆனந்த்,33. ரவுடியான இவர், மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் அவரது பிறந்த நாளா கடந்த 18ம் தேதி, இ.சி.ஆரில் செல்லும்போது, பின்தொடர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கருவடிக்குப்பம் பகுதியை சந்துரு, சஞ்சய், ராஜ்கமல், சந்தோஷ், நாகராஜ் மற்றும் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் வேவு பார்த்த லாஸ்பேட்டையை சேர்ந்த எட்வின்பால், கொலை செய்ய துாண்டிய முன்னாள் ஐ.ஆர்.பி.என்., போலீஸ்காரர் ஜெகன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் எட்வின்பால், நேற்று ஜெகன் ஆகியோர் புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us