/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவரை தாக்கிய இரண்டு பேர் கைது
/
மாணவரை தாக்கிய இரண்டு பேர் கைது
ADDED : மார் 11, 2024 05:13 AM
புதுச்சேரி, : முன்விரோத தகராறில் கல்லுாரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் குபேந்திரன், 22; தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ், ஜெகதீஷ், மதன். இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்தது.
நேற்று வீட்டில் தனியாக இருந்த குபேந்திரனை, மனோஜ் உட்பட மூவரும் சேர்ந்த பீர் பாட்டிலால் தாக்கினர். படு காயமடைந்த, குபேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மனோஜ், 19; ஜெகதீஷ், 18; ஆகியோரை கைது செய்தனர். மதனை தேடி வருகின்றனர்.

