ADDED : ஜன 24, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமணய்யன், 48; பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் வால்டீப் ராஜா, சுதாகர் ஆகியோர் இருவரும், நேற்று முன்தினம் ரமணய்யனை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர், காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, வால்டீப் ராஜா உட்பட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

