ADDED : ஜன 27, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 50; விவசாயி. நேற்று மாலை இவரது ஆடு சாமியார்பேட்டை கடற்கரை அருகே மேய்ந்து கொண்டிருந்தது.
கடற்கரைக்கு காரில் சுற்றுலா வந்த இருவர், அந்த ஆட்டை காரில் ஏற்றி திருட முயன்றனர். இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, வடலுார் அடுத்த அரங்கமங்களம் பழனி மகன் மகேஷ்குமார், 25; ராஜாங்கம் மகன் ராகுல், 21; இருவரையும் கைது செய்தனர்.