ADDED : நவ 10, 2024 04:28 AM
அரியாங்குப்பம் : கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் மாதா கோவில் தெருவில், கஞ்சா விற்பதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், அங்கு சென்று சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர், சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்த ரிஷி, 25, என தெரியவந்தது. அவர் கஞ்சா பாக்கெட் வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதே போல, மணவெளி பெரியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24. கஞ்சா வழக்கில் இவரை தவளக்குப்பம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியாங்குப்பம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.