ADDED : பிப் 19, 2024 04:47 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் பின்புற நரிக்குறவர் காலனி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் குடியிருப்பு அருகே சென்றனர். போலீசாரை கண்ட இருவர் தப்பியோடினர்.
உடன் போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தபோது, கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், நரிக்குறவர் காலனி, செல்வமணி (எ) செல்லா, 23; இளவரசன் (எ) இலை, 21; ஆகியோர் என்பதும், சென்னை கோயம்பேடு டிரைவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா வாங்கி வந்து, புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா, 2 மொபைல்போன், ரூ. 8000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

