/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது
/
லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது
ADDED : ஜன 27, 2025 04:34 AM

பாகூர் பாகூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு கிராமத்தில் 3ம் எண் லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கிருந்த இருவர், போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்த சரவணன், 46; மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை பகுதி சதீஷ் 38; என்பதும், இருவரும், 3 எண் கொண்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பைக், இரண்டு மொபைல் போன், 4,960 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் போலீசார், கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.