ADDED : ஜன 08, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்; காரைக்காலில் மது அருந்திவிட்டு பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி கொன்னக்காவலி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருவர் பொது இடத்தில் மது அருந்திவிட்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பரணிதரன், 24; மணிமாறன்,28, ஆகியோர் என, தெரிய வந்தது. இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.