ADDED : மார் 15, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் நரேஷ் 19, இவர் நேற்று முன்தினம் இரவு 12.15 மனியளவில் தனது பைக்கை வீட்டு எதிரில் நிறுத்திவிட்டு ,12.40 மணியளவில் வீட்டு கதவை மூடுவதற்கு வந்த போது, தனது பைக்கை காணமால் அதிர்ச்சியடைந்தார். உடன் அவர் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் பைக் தேடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது சோலை நகர் வடக்கு தெரு பக்கம் பைக்கை தள்ளி கொண்டு சென்ற இருவரை மடக்கி பிடித்து முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விமல், 22; ரூபன், 23; எனத் தெரியவந்தது.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

