/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காப்பர் திருடிய 2 பேர் கைது
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காப்பர் திருடிய 2 பேர் கைது
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காப்பர் திருடிய 2 பேர் கைது
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காப்பர் திருடிய 2 பேர் கைது
ADDED : ஏப் 14, 2025 04:27 AM

திருக்கனுார்,: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காப்பர் பொருட்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. கடந்த 2016ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையின் உள்ளே நேற்று அதிகாலை சத்தம் கேட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி அதிகாரி ஜெகநாதன் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, மூன்று நபர்கள் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகளை திருடிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு ஜெகநாதன் சத்தம் போட்டதால் மூன்று பேரும், திருடிய பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இது குறித்து ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், காப்பர் கம்பியை திருடியது லிங்காரெட்டிப்பாளையம் தோப்பு வீதியைச் சேர்ந்த அய்யப்பன், 42, மற்றும் அவரது நண்பர்களான வி.கேணிப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சகோதரர்கள் சுந்தரகிருஷ்ணன், 28; சத்தியநாராயணன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அய்யப்பன் மற்றும் சுந்தரகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சர்க்கரை ஆலையில் உள்ளே திருடிய 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 30 கிலோ காப்பர் பொருட்கள், திருட்டுக்கு பயன்படுத்திய கம்பிகளை அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைந்தனர்.
தலைமறைவாக உள்ள சத்தியநாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்.

