/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியிட்ட காதலன் உள்ளிட்ட இருவர் கைது
/
பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியிட்ட காதலன் உள்ளிட்ட இருவர் கைது
பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியிட்ட காதலன் உள்ளிட்ட இருவர் கைது
பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியிட்ட காதலன் உள்ளிட்ட இருவர் கைது
ADDED : ஆக 28, 2025 02:50 AM

புதுச்சேரி: இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன், அவரது தோழி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருடைய அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.
அதில், அந்தரங்க வீடியோவை எடுத்தவர் அப்பெண்ணின் காதலன் புதுச்சேரியை சேர்ந்த அபிமன்யு, 32. என்பது தெரியவந்தது. அபிமன்யுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பெண்ணிடம் வீடியோ காலில் பேசும்போது, அந்த பெண் பேசிய வீடியோ காலை பெண்ணிற்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்து, அபிமன்யூ வைத்திருந்துள்ளார்.
இதற்கிடையே, அபிமன்யுவின் தோழியான மற்றொரு பெண், அந்த வீடியோவை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, சமூக வலைத்தளம் மற்றும் பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.
அதையடுத்து, அபிமன்யு மற்றும் அவரது தோழியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
கைது செய்ய திட்டம் இன்ஸ்ட்ரா கிராம், வாட்ஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பிய அந்த பெண்ணின் அந்தரங்க படத்தை நீக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவை மேலும் பலர், சமூக வலை தளங்களில் பதிர்ந்துள்ளதால், அவர்களையும் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

