UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால் நெடுங்காடு மேலகாசக்குடி, பள்ளர் தெருவைச் சேர்ந்தவர் கிருத்திகா, 32; இவருக்கும் நெடுங்காட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன் மற்றும் பிரதாப் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.
நேற்று முன்தினம் இளங்கோவன், பிரதாப் இருவரும், கிருத்திகா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதல் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கிருத்திகா புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார், இளங்கோவன்,பிரதாப் இருவர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
