UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: ரெஸ்டோ பாரில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி ராயன்பாளையத்தில் உள்ள தனியார் ரெஸ்டோ பாரில் நேற்று முன்தினம் பணம் வைத்து சூதாடுவதாக கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிய கோட்டுச்சேரியைச் சேர்ந்த செல்வம்,62; ஜெகன்,46; சதீஷ்குமார்,42; சந்திரபிரகாஷ்,43; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, ரூ.10ஆயிரம் பணம், சீட்டுக்கட்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
