/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
/
இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
ADDED : ஏப் 08, 2025 03:57 AM
பாகூர்: புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 37, இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ம்தேதி மதியம் தனது தாய் அமுதா 56, தங்கை மணிமாலா 31, தங்கை மகள்கள் மகதிசாய் 2; ஐந்து மாதக் குழந்தை மகிழ் மித்ரா, ஆகியோரை மாருதி காரில் ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தவளக்குப்பம் அடுத்துள்ள அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது, எதிரே வந்த டொயோட்டா எட்டியோஸ் கார், சதீஷ்குமார் கார் மீது மோதியது.
இந்த விபத்தில், சதிஷ் குமார், அவரது தாய், தங்கை, தங்கையின் குழந்தைகள் மற்றும் எட்டியாஸ் காரில் பயணம் செய்த வீராணம் பகுதியை சேர்ந்த லலிதா 84 ஆகியோர் காயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சதீஷ்குமார் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.