sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இருமல் மருந்து தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு தடை

/

 இருமல் மருந்து தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு தடை

 இருமல் மருந்து தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு தடை

 இருமல் மருந்து தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு தடை


ADDED : ஜன 23, 2026 03:35 AM

Google News

ADDED : ஜன 23, 2026 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு கண்டுபிடித்ததை தொடர்ந்து, நாடு முழுதும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை நடந்த ஆய்வில், 40 வகையான மருந்துகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள ரெட் நெக்ஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரிப்பான, 'ரெஸ்பி ப்ரெஷ்' இருமல் மருந்தை தடை செய்து, புதுச்சேரி மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திருவண்டார்கோவிலில் உள்ள தோரப் பார்மா நிறுவனம் மற்றும் திருபுவனை பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் உள்ள வெர்டெக்ஸ் பார்மா கெமிக்கல்ஸ் நிறுவனங்களை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதில், இரு நிறுவனங்களிலும், இருமல் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் 'பாலி எத்திலின் கிளைக்கால்' அளவுக்கு அதிகமாக இருந்தது. இதையடுத்து, இந்த இரண்டு நிறுவனங்களும் இருமல் மருந்து தயாரிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us