/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கலை கல்லுாரியில் இரண்டு நாள் பயிற்சி
/
அரசு கலை கல்லுாரியில் இரண்டு நாள் பயிற்சி
ADDED : அக் 01, 2024 06:26 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலை கல்லுாரியில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
ராஜிவ்காந்தி அரசு கலை கல்லுாரியில் ஐ.கியூ.ஏ.சி., மகளிர் பிரிவு மற்றும் டி.ஒ.சி.எல்., இணைந்து பெண்கள் தலைமையில் பெண்கள் எனும் நோக்கில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கல்லூரியில் நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த பயிற்சிப் பட்டறை நிறைவு விழாவில், கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். டி.ஒ.சி.எல்., குழும இணை இயக்குநர் யுவயாழினி ஒருங்கிணைப்பாளர்கள் லோகிதா, மணிமொழி, கலைவாணி, வைஷாலி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
முதல் நாள் நடந்த பயிற்சி விழாவில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர், கீர்த்தி, மாணவிகளுக்கு தற்காப்பு மற்றும் ஆளுமைப் பண்புகளை பற்றி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், கல்லுாரி உதவிப் பேராசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அருளரசி நன்றி கூறினார்.