ADDED : அக் 15, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: விழுப்புரத்தைச் சேர்ந்த சகோதரர்களான கார்த்திக்,24; பாபு,23; இருவரும் புதுச்சேரி, காந்தி நகரில் உள்ள தங்களது மாமா வீட்டிற்கு வந்தனர்.
பின், அங்கிருந்து நேற்று இரவு புதிய கே.டி.எம்., பைக்கில் ராஜிவ் சதுக்கத்தை நோக்கி அதிவேகமாக வந்து, கொக்கு பார்க் சந்திப்பு வளைவில் திரும்பியபோது, திடீரென டிஸ்க் பிரேக்கை கார்த்திக் அடித்தார். நிலை தடுமாறிய பைக் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சென்டர் மீடியலின் மீது பயங்கரமாக மோதியது.
படுகாயமடைந்த இருவ ரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
