தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/1 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது

1 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது

1 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது


ADDED : அக் 15, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று கொம்பாக்கம், செட்டிக்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக வந்த காரை (பி.ஒய் 05 ஏபி 6976) போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும், தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி, காரை சோதனை செய்தனர். அதில் பையில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

காரில் இருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் லாஸ்பேட்டை திலகம் நகர் கார்த்திகேயன், 31; கொம்பாக்கம், ஜார்ஜ் வீதி பிலிசியன், 27; கடலுார், சிங்கிரிகோவில், ஐயனார் கோவில் தெரு கார்த்திகேயன், 28; முருங்கப்பாக்கம், பாப்பன்சாவடி, ஆசிரியர்கள் காலனி சண்முகம், 28; நோணாங்குப்பம், புது காலனி சந்தோஷ், 23, ஆகியோர் என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள், கார், 6 மொபைல் போன்கள், 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறை யில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us