/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைதிகள் தற்கொலை எதிரொலி சிறை காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்
/
கைதிகள் தற்கொலை எதிரொலி சிறை காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்
கைதிகள் தற்கொலை எதிரொலி சிறை காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்
கைதிகள் தற்கொலை எதிரொலி சிறை காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்
ADDED : செப் 25, 2024 04:18 AM
புதுச்சேரி: காலாப்பட்டு மற்றும் காரைக்கால் சிறையில் தண்டனை கைதிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், 2 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த விவேகானந்தன், 57; மார்ச் 5ம் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவர் கடந்த 16ம் தேதி, தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி விவேகானந்தன் கதவு கம்பியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பு காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி, வில்லியனுாரைச் சேர்ந்த பிரதிஷ், 26; கடந்த ஜூன் 11ம் தேதி துாக்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரு சம்பவங்களிலும், பணியின்போது அலட்சியமாக இருந்த சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து விவேகானந்தன் தற்கொலை செய்த போது பணியில் இருந்த சிறை காவலர் முத்துக்குமரன், காரைக்காலில் கைதி பிரதீஷ் தற்கொலை செய்து கொண்டபோது பணியில் இருந்த சிறை காவலர் ராமன் ஆகிய இருவரையும், சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங் சாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.