
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:  கருவடிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 30; இவர், கடந்த 31ம் தேதி, வீட்டில் இருந்து  வில்லியனுாரில் உள்ள மரப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார். பின்  அவர்  வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் தண்டபா ணி (எ) கிருஷ்ணராஜ், 83; இவர் கடந்த 24ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

