/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாகை நான்கு வழிச்சாலையில் கார் - பைக் நேருக்கு நேர் மோதல் 2 பேர் படுகாயம்: பைக் எரிந்து சேதம்

ADDED : பிப் 03, 2025 04:58 AM

பாகூர் : பாகூர் அருகே புறவழிச்சாலையில் கார் - பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், வாலிபர்கள் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், பைக் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலையில், விழுப்புரம் - கடலுார் இடையே பணிகள் முடிந்து சாலையில் வாகனங்கள் சென்று வருகிறது. இதனிடையே, பாகூர் அருகே புறவழிச்சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கும் பணிக்காக, பின்னாட்சிக்குப்பம் - பாகூர் சந்திப்பு ஆகிய இரு பகுதியிலும் சாலைகள் மூடப்பட்டதால், அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் சென்று வருகின்றன.
நேற்று மாலை 6:00 மணிக்கு, குருவிநத்தம் சந்திப்பு அருகே கடலுார் நோக்கி சென்ற காரும், புதுச்சேரி நோக்கி சென்ற யமகா பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டது. அதில், பைக்கில் வந்த இரு வாலிபர்களும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய பைக் தீப்பற்றி எரிந்தது. பாகூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பைக் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்து விசாரித்து வருகின்றனர்.