ADDED : அக் 28, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல்தாசன் 31, இளவரசன் 30, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மது குடித்து விட்டு மங்கலம்-உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த மங்கலம் போலீசார் விரைந்து சென்று இரு வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூரல் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.