/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேற்கூரை இல்லாமல் வெயிலில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள்
/
மேற்கூரை இல்லாமல் வெயிலில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள்
மேற்கூரை இல்லாமல் வெயிலில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள்
மேற்கூரை இல்லாமல் வெயிலில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள்
ADDED : ஜூன் 18, 2025 04:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில், மேற்கூரை இல்லாமல், இரு சக்கர வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து வருகிறது.
புதுச்சேரியில் ஸ்மார்சிட்டி திட்டத்தின் மூலம் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பஸ் நிலையம் அருகில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. பஸ் நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, இதுவரை மேற்கூரை கட்டாமல் இரு சக்கர வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடியே நிற்கிறது.
வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூல் செய்தும், மேற்கூரை அமைக்காமல் இருந்து வருகிறது. மேலும், வெளியூர் செல்பவர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமலும், வாகனங்கள் நிறுத்தும் போது, இடிபாடுகளுடன் நிறுத்தப்பட்டு வருகிறது. அதனால், வாகனங்களை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.