/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு முதலியார்பேட்டையில் துணிகரம்
/
அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு முதலியார்பேட்டையில் துணிகரம்
அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு முதலியார்பேட்டையில் துணிகரம்
அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு முதலியார்பேட்டையில் துணிகரம்
ADDED : அக் 03, 2025 11:16 PM
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் 6 சவரன் செயின்களை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டை, பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி கலைவாணி,50; இவர், நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு வீட்டில் இருந்து சாமிநாதப்பிள்ளை தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், கலைவாணி கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். திடுக்கிட்ட கலைவாணி, தாலி செயினை கையில் பிடித்து கொண்டதால், பாதி 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதேபோல், இரவு 8:30 மணிக்கு, முதலியார்பேட்டை ஜான்பால் நகர் ஞானசேகர் மனைவி தனபாக்கியம்,54; தனது பேத்தியுடன் பால் வாங்க கடைக்கு சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரு சம்பவத்தில் ஈடுபட்டதும் ஒரே நபர் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் இரு பெண்களிடம் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.