ADDED : செப் 29, 2026 08:54 PM
புதுச்சேரி: சாரம் லட்சுமி நகர் பகுதியில் டி.நகர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், சாரம் அறிவாளன் மகன் ஆகாஷ்,23, என்பதும், அவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்கின்றனர்.
மற்றொரு சம்பவம்:
மேட்டுப்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைக்குமார் தலைமையிலான போலீசார் முத்திரைப்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
கணபதி நகர் பகுதியில் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய முத்திரைபாளையம் குமார் மகன் கார்த்திக்ராஜா,29, என்பவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர். கார்த்திக்ராஜா மீது கஞ்சா, அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
