தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கம்பளி பூச்சிகள் ட்ரோன் மூலம் அழிப்பு

பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கம்பளி பூச்சிகள் ட்ரோன் மூலம் அழிப்பு

பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கம்பளி பூச்சிகள் ட்ரோன் மூலம் அழிப்பு


ADDED : செப் 29, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை அரசு தொடக்கப் பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கம்பளி பூச்சிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கப்பட்டது.

உழவர்கரை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், அரசு துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 49 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் கம்பளிப் பூச்சிகள் அதிக அளவில் படர்ந்துள்ளது.

இப்பூச்சிகளால் அங்கு பயிலும் துவக்க பள்ளி மாணவர்கள் கடந்த வாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டனர். சில மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

பள்ளி வளாகத்தில் கம்பளிப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததன் காரணமாக நேற்று 17 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்தனர்.

தகவலறிந்த, உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி  உடனடியாக நடவடிக்கை எடுக்க உழவர்கரை நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு வழிகாட்டுதல்படி, நகராட்சி இளநிலைப் பொறியாளர் சிவகுமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று நேற்று காலை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரங்களின் உச்சி வரை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து கம்பளி பூச்சிகளை அழித்தனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நிம்மதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us