ADDED : செப் 29, 2026 08:54 PM
புதுச்சேரி: பெண் வியாபாரியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், நேருவீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் கீரை வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் கருவடிக்குப்பம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், நானும் அங்கு தான் செல்கிறேன் என்று கூறி பைக்கில் ஏற்றி அவரை நேரு வீதி நோக்கி அழைத்து வந்தார்.
அப்போது திடீரென்று பாழடைந்த கட்டிடத்துக்குள் பைக் சென்றது. அங்கு அவரை மிரட்டி அந்த வாலிபர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பெண் வியாபாரியை பலாத்காரம் செய்தது ஜீவானந்தபுரத்தை சேர்ந்த தமிழரசன் வயது,29; என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
