ADDED : நவ 19, 2026 03:24 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை போலீசார் நேற்று (நவ.,18) மதியம் 2.40 மணியளவில் சாந்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கொல்லிமேடு மைதானத்தில் வாலிபர் ஒருவர் பொதுமக்களகமை் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் பிடிக்க சென்ற போது தப்ப முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் லாஸ்பேட்டை நெருப்புக் குழி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிவா,18; என தெரியவந்தது. சிவாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பெரியகடை போலீசார் நேற்று 45 அடி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் ஓட்டல் அருகில் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய லாஸ்பேட்டை அரசு குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் மகன்,கார்த்திகேயன்,22; என்பவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
